நடிப்பு ராட்சசனான தனுஷின் திருச்சிற்றம்பலம்-மூன்று நாட்களில் ரூ. 32. 97 கோடி வசூல் !!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் பார்த்த அனைவருக்கும் அது பிடித்துவிட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் நல்லவிதமாக கருத்து தெரிவித்தார்கள். அதை பார்த்துவிட்டு தியேட்டருக்கு படையெடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதிகம்.
தமிழ் ராக்கர்ஸ்
திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸான வேகத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ். ஆன்லைனில் படம் வந்துவிட்டபோதிலும் திருச்சிற்றம்பலத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதனால் திருச்சிற்றம்பலம் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது.
வசூல்
திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 32. 97 கோடி வசூல் செய்துள்ளது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படமும் தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது. இருப்பினும் அதையும் தாண்டியும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தியது விக்ரம்.
கமல்
அடடே, விக்ரமை தமிழ் ராக்கர்ஸால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று ரசிகர்கள் வியந்தார்கள். இந்நிலையில் விக்ரமுக்கு நடந்தது தான் திருச்சிற்றம்பலம் படத்திற்கும் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது தமிழ் ராக்கர்ஸை தாண்டியும் மக்கள் தியேட்டருக்கு சென்று வசூலை அதிகரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.