நம்ப சூப்பர் ஸ்டார் மீண்டும் தாத்தா ஆகிட்டாரு!!வைரலாககும் குழந்தையின் பெயர் – “வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி”

September 12, 2022 at 10:58 am
pc

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். இவரது கணவர் பெயர் விசாகன். இந்நிலையில, விசாகன் – சௌந்தர்யா தம்பதியினருக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
இந்த நற்செய்தியை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் தனது குழந்தையின் கை விரலை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்திற்கு கீழே அபரிமிதமான கடவுள் அருளுடனும், எங்கள் பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடனும் வேதின் தம்பியை வரவேற்பதில் விசாகன், வேத் மற்றும் நானும் மகிழ்ச்சியடைகிறோம் என்று பதிவிட்டுள்ளார். 

பிறந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்றும் பெயர் சூட்டியுள்ளனர். மருத்துவர்கள் சுமனா மனோகர், ஸ்ரீவித்யா சேஷாத்ரி ஆகியோருக்கும் மிகப்பெரிய நன்றி என்றும் பதிவிட்டுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website