நம் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர்களுக்கு காலாவதி தேதியை அறிந்து கொள்வது எப்படி …?

நம் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர்களுக்குExpiry Date உள்ளது.அது cylinder body ஐயும், Top ring பகுதியையும் இணைக்கும் மூன்று Metal strip இல், ஏதாவது ஒன்றில், உட்புறமாக,A to D எழுத்தில், ஏதேனும் ஒரு எழுத்தில், ஏதாவது ஒரு எண்ணுடன் சேர்க்கப்பட்டு,பெயின்டில் எழுதப்பட்டிருக்கும்.
அதை புரிந்து கொள்ளும் முறை.
A – January to March
B – April to June
C – July to September
D – October to December
எண்கள் – வருடத்தை குறிக்கும்B-16 என்றால் June, 2016 கழித்து அந்த சிலிண்டரை நாம் உபயோகிக்க கூடாது.ஒரு வேளை காலாவதியான கேஸ் சிலிண்டரை உபயோகித்தால்,அந்த சிலிண்டரில் இருந்து, எந்த நேரத்திலும், கேஸ் கசிவு ஏற்பட்டு,நம் உயிரை அது பறிக்கும். கேஸ் சிலிண்டர் வாங்கும் போது Expiry date ஐ சரி பார்த்து வாங்கினால், சமையல் மட்டும் அல்ல , நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும்.( இன்றே உங்களது வீட்டில் உள்ள சிலிண்டரின் Expiry Date – ஐ சரி பார்த்துக் கொள்ளவும்)