நயன்தாராவின் அடுத்த படத்தில் இணையும் பிரபலம்

September 30, 2023 at 4:16 pm
pc

பிரபல பான் இந்திய நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கும் ’கண்ணப்பா’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். பிரபாஸ் சிவன் கேரக்டரில், நயன்தாரா பார்வதி கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் மேலும் சில பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

குறிப்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’கண்ணப்பா’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்க இருக்கிறார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

பிரபாஸ், நயன்தாராவுடன் மோகன் லால், சிவராஜ்குமார், விஷ்ணு மஞ்சு என தென்னிந்திய பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சில பாலிவுட் பிரபலங்கள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ’கண்ணப்பா’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஏற்கனவே பிரபாஸ் நடிக்க உள்ள ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்தது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website