நயன்தாரா கல்யாண விருந்தில் வெறும் சைவ உணவுகள் மட்டுமே – 20 வகை உணவுகள் பட்டியல் இதோ.

June 9, 2022 at 4:27 pm
pc

நயன்தாரா – விக்னேஷ் திருமணம்
7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. இன்று காலை 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

பிரபலங்கள் பங்கேற்பு
இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். திருமணத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என பல்வேறு பலத்த கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நயன்தாரா திருமணம்;பலாப்பழ பிரியாணி முதல் இளநீர் பாயாசம் வரை – வைரலாகும் மெனு லிஸ்ட்..!

திருமண விருந்து
திருமணத்தையொட்டி இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்யாண விருந்து கொடுக்க நயன்-விக்கி தம்பதி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

விருந்து மெனு லிஸ்ட்
இவர்களின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் அடங்கிய மெனு தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. நயனும் விக்கியும் அசைவ பிரியர்களாக இருந்தாலும், அவர்களது திருமணத்தில் சுத்த சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டிருக்கின்றன. செட்டிநாடு ஸ்டைலில் 20 வகையான உணவுகள் அந்த மெனுவில் இடம் பெற்றிருக்கிறது.

நயன்தாரா திருமணம்;பலாப்பழ பிரியாணி முதல் இளநீர் பாயாசம் வரை – வைரலாகும் மெனு லிஸ்ட்..!

இதோ அந்த லிஸ்ட்
வாழைக்காய் வருவல்
சேனக்கிழங்கு வருவல்
சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு
காளான் மிளகு வறுவல்
கேரட் பீன்ஸ் பொரியல்
பலாப் பழ பிரியாணி
பன்னீர் பட்டாணிக்கறி
சாம்பார் சாதம்
தயிர் சாதம்
பூண்டு மிளகு ரசம்
தயிர்
பருப்புக் கறி
அவியல்
மோர்க் குழம்பு
மிக்கன் செட்டிநாடு கறி (வேகன் உணவு)
உருளைக் கார மசாலா
காய் பொரிச்சது
பொன்னி ரைஸ்
பாதாம் அல்வா
இளநீர் பாயாசம்
கேரட் ஐஸ் கிரீம்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website