நயன்தாரா திருமண லுக்கில் நடிகை ஆர்த்தி!வைரலாகும் விக்னேஷ் சிவன் கமெண்ட்…

August 13, 2022 at 6:47 pm
pc

நயன்தாராவின் திருமண லுக்கை போன்று நடிகை ஆர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படத்தினை அவதானித்த விக்னேஷ் சிவன் அதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை ஆர்த்தி

பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி, கிரி, படிக்காதவன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் மக்களிடையே பிரபலமானார். பின்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே மேலும் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் தனது கணவர் மற்றும் நடிகரான கணேஷ்கருடன் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

நயன்தாரா திருமண லுக்கில் ஆர்த்தி

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் திருமண புகைப்படத்தை ஒப்பிட்டு நடிகை ஆர்த்தி ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படமும், அதற்கு நயன்தாராவின் கணவர் மற்றும் இயக்குனரான விக்னேஷ் சிவன் கொடுத்த ரியாக்ஷனும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர், பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 09 ஆம் தேதிதிருமணம் செய்து கொண்ட நிலையில், நடிகை நயன்தாராவின் புடவை அவர் அணிந்திருந்த நகை அனைத்தும் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த வகையில், நயன்தாரா கல்யாண உடையை போலவே, தானும் ஒரு உடை அணிந்தபடி ஆர்த்தி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

இதில் ஒரு புறம் நயன்தாராவின் திருமண புகைப்படமும், மறுபுறம் அதே உடையில் ஆர்த்தி இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மேலும், தனது கேப்ஷனில், “என்ன கொடுமை இது Expectation vs reality” என தனது லுக்கை அவரே கலாய்த்து குறிப்பிட்டிருந்தார்.

விக்கி பதிவிட்ட கருத்து

ஆர்த்தியின் இந்த ட்வீட்டை கவனித்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அதனை பகிர்ந்து, “நீங்கள் இன்னும் அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி” என குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவின் திருமண லுக்குடன் இணைத்து, ஆர்த்தி போட்ட ட்வீட்டும், அதற்கு விக்னேஷ் சிவன் கொடுத்த ரியாக்ஷனும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

அதே போல, பிரபல நடிகை ப்ரியா ஆனந்தும் இந்த புகைப்படத்தினை பார்த்து, “நான் இரண்டு அழகான பெண்களை பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website