நல்ல படங்கள் தமிழ் சினிமாவில் – ‘சூரரைப்போற்று’ படக்குழுவை பாராட்டிய ரஜினி, கமல்!

July 24, 2022 at 8:51 am
pc

2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது. தேசிய திரைப்பட விருது வென்ற அனைவருக்கும் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல் வாழ்த்துக் கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். ரஜினி பதிவில், தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப்போற்று பட இயக்குனர் மற்றும் விருது பெறும் திரையுலக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என்று பதிவிட்டுள்ளார்.

கமல் பதிவில், சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்க செய்துள்ளது தமிழ் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கமல் பதிவிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website