நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-பாஜகவுக்கு ஆதரவு!!பிரபல நடிகை கங்கனா ரனாவத்…

October 30, 2022 at 7:28 pm
pc

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி என்ற திரைப்படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். இவர் தற்போது கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல கருத்துக்களை தெரிவித்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் இமாச்சல பிரதேச மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார். மாண்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்றும் பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் அந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website