நாடு நாசமா போகுது.. கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுக்கும் சவால்.! வெளியான அதிர்ச்சி வீடியோ..

July 21, 2022 at 8:24 pm
pc

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு நகரில் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கல்லூரி மாணவர் ஒருவர் மற்றும் மாணவி காணப்படுகிறார். வீடு ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில், அறை ஒன்றில் சுற்றியிருக்கும் அவர்கள் இருவரையும் மற்றவர்கள் உற்சாகப்படுத்துகின்றனர். இருவரும் நெருங்கி வந்து லிப்-லாக் முத்தமிட்டு கொள்கின்றனர். இந்த லிப்-லாக் போட்டியை மாணவ குழுவினர் அவர்களுக்குள் நடத்தி உள்ளனர் என்றும் தகவல் கூறுகிறது. மாணவ மாணவியர்கள் சீருடையுடன் காணப்படுகின்றனர். 

இளஞ்ஜோடி ஒன்று ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொள்கின்றனர். மற்றவர்கள் சுற்றி இருக்கின்றனர். மாணவி ஒருவர் தனது சகாவின் மடியில் படுத்து இருக்கிறார். மாணவர்களில் ஒருவர், அடுத்து யார் முத்தமிட வருகிறார்கள் என கூறுகிறார். இந்த வீடியோ தட்சிண கன்னடா கடலோர மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டி நடத்தும்போது, மாணவர்கள் போதையில் இருந்தனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website