நான் இப்படித்தான்!யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை..பிரியங்கா பளிச்!

September 17, 2024 at 1:06 pm
pc

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக தெரிவித்து இருந்தார். இதனால் அதிகமாக பிரியங்காவிற்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பிரியங்கா பேசிய பேட்டி ஒன்றும் இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

தொகுப்பாளராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பலருக்கும் பரீட்சையமான மணிமேகலை நேற்று முன் தினம் கொளுத்திய வெடி இன்னும் வெடித்துக்கொண்டே இருக்கிறது. அதோடு சமூக வலைத்தளங்களில் மணிமேகலைக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். மணிமேகலை தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தாலும் இந்த சீசனில் போட்டியாளராக வந்த பெண் தொகுப்பாளர் என்னை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார் என்று ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா தான் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் என்று இணையத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது பற்றிய எந்த விளக்கமும் கொடுக்காமல் பிரியங்கா ஜாலியாக டூர் போய் இருக்கிறார். அதே நேரத்தில் பிரியங்காவின் ரசிகர்கள் மணிமேகலை வேற சேனலுக்கு போக வேண்டும் என்பதற்காக பிரியங்கா மீது குற்றச்சாட்டு வைக்கிறார் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது இணையத்தில் காரசாரமாக பேசப்பட்டு வருகிறது. பிரியங்காவை தாக்கி பலர் மீம்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் சில மாதங்களுக்கு முன்பு பிரியங்கா விருது வாங்கிய ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் பிரியங்கா பேசுகையில், நான் இந்த விருது வாங்கியது சந்தோஷம்தான். இதை நான் திமிரா சொல்லல என்னை நம்பி என்னை பாராட்டும் ரசிகர்களுக்காக நான் இந்த விருதை வெற்றி பெற்று இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. திமிராக என்னை குறை சொல்லி அவர்கள் முன்பு நான் வெற்றி பெற்று விட்டேன் என்று அலட்டிக் கொள்ள ஆசை இல்லை. இன்னும் நான் நிறைய வெற்றி பெற வேண்டும்.

ஆனால் நான் இதெல்லாம் கரெக்டா தான் பண்ணுறேனா? நான் பெரும் வெற்றிகெல்லாம் நான் தகுதியான ஆள் தானா? என்று சிந்தனை எனக்குள் அப்பப்போ வந்து போகுது. தொகுப்பாளர் என்பது எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை. எனக்கு இது மட்டும் தான் தெரியும். அதுவும் ஒழுங்கா தெரியுமானு கூட தெரியாது… என்னால முடிஞ்ச அளவுக்கு இத நான் பண்றேன்.

பிடிக்கலன்னாலும் ரசிகர்கள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. நான் ஏதாவது தப்பு செய்தால் நீங்க திட்டுங்க நான் இன்னும் பெட்டரா பண்ணிக்கிறேன். நான் உங்களுக்கு சத்தியம் செய்து சொல்கிறேன் எனக்கு தெம்பு இருக்கிற வரைக்கும் உங்க எல்லாருக்கும் என்டர்டைன்மென்ட் பண்ணுவேன். எதுவும் நிரந்தரம் கிடையாது. எந்த வெற்றியையும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று இல்ல.

எது பண்ணுறியோ அதை தைரியமா பண்ணு பிரியங்கா என்று எனக்கு நானே மோட்டிவேஷன் சொல்லி கொள்வேன். உன்னை ஏமாற்றாத ஒரே விஷயம் உன்னுடைய தொழில் மட்டும் தான். அதனால் அதில் கவனமா இன்னும் பெட்டரா வேலை பண்ணு. இந்த தொழிலை நம்பி இந்த தொழிலில் இருந்து நீ சம்பாதித்த மக்களை நம்பி ஓடிக்கிட்டே இரு. உனக்கு என்ன சேரணுமோ அது வந்து சேரும் என்பது எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்.

என்னன்னு தெரியல லாஸ்ட் மூணு வருஷமா எனக்கு எமோஷனல் அதிகம் ஆயிடுச்சு. மேடையில் வேறு யாராவது பேசினால் கூட என்னை அறியாமல் நான் அழுது விடுகிறேன். என்னை பேசினாலும் சரி, இல்லை அடுத்தவர்களுடைய கஷ்டத்தை பற்றி சொன்னாலும் சரி என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடுகிறது. இதில் எதனால் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய மண்டைக்குள் இம்பாலிசிங் ஹார்மோன் இருக்கிறதா என்று தெரியவில்லை.

அதுபோல உங்களை பற்றி எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை. கெக்கபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டே மத்தவங்கள வெறுப்பேத்தி… கடுப்பேத்தி.. என்ன வேணாலும் பண்ணுங்க. உங்களுக்கு புடிச்ச மாதிரி பண்ணுங்க. உங்க மனசாட்சிக்கு தப்பா எதுவும் பண்ணாதீங்க. நிம்மதியா தூங்குங்க, சந்தோஷமா இருங்க என்று அந்த பேட்டியில் எமோஷனல் ஆகவும் ஜாலி ஆகவும் இரண்டும் கலந்து பிரியங்கா பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோவை இணையத்தில் பகிரும் ரசிகர்கள் பிரியங்காவை பாராட்டி வருகிறார்கள்.

அதே நேரத்தில் பிரியங்கா இதில் தன்னுடைய வேலைக்காக தான் எவ்வளவு வேண்டும் என்றாலும் இறங்குவேன் என்று ஓப்பனாக சொல்கிறார். இதனால் தான் மணிமேகலையை விடவும் அந்த நிகழ்ச்சியில் நான் தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று பிரியங்கா பிரச்சனை செய்திருக்கிறார் போல என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு நாள் முழுக்க சூட்டிங் எடுக்கப்பட்டு அது இரண்டு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் அதில் பல விஷயங்கள் கட் செய்யப்படும் நிலையில் அதையும் தாண்டி எப்படியாவது நிகழ்ச்சியில் நம்முடைய முகம் தெரிய வேண்டும் என்று அதில் போட்டியாளராக இருப்பவர்களும் சரி கோமாளிகளும் சரி நடுவர்களும் சரி அதிகமாக மெனக்கிடுகிறார்கள்.

அதில் ஒருவரை ஒருவர் டாமினேட் செய்து அவர்கள் அடுத்தவர்களை மட்டம் தட்டுவதால் தான் அது ஒரு கண்டன்ட்டாக மாறி மக்கள் மத்தியில் அது பேசப்படுகிறது. அதற்காகவே சிலர் அடுத்தவர்களின் மனம் புண்படும்படி கூட பேசுவதை பார்க்க முடிகிறது. ஒரு சில நேரங்களில் இது ஜாலியாக போனாலும் சில நேரங்களில் எதிர்த்தரப்பில் இருப்பவர்களின் மனதை சிலர் நோகடித்து விடுகிறார்கள். அதுதான் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது.

மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது சரி என்று நினைக்கிறீர்களா? அல்லது பிரியங்கா என்டர்டைன்மெண்டுக்காக செய்யும் செயல் சரி என்று நினைக்கிறீர்களா? உங்க கருத்தை தட்டி விடுங்க பாஸ்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website