நாப்கீனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி..? நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை ….

May 28, 2022 at 11:26 am
pc

எல்லா பெண்களுக்கும் மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி காலம் என்பது வலிமிக்க மற்றும் அசௌகரியமான காலமாகும். இந்த நேரத்தில் பெண்கள் கடுமையான வயிற்று வலி மற்றும் பல பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். இந்த மாதிரியான நேரத்தில் பெண்கள் சானிட்டரி பேடுகளை பயன்படுத்துவது வழக்கும்.

இந்த நேப்கின்களால் சில பெண்களுக்கு அந்தரங்க பகுதிகளைச் சுற்றி கடுமையான அரிப்புக்கள் மற்றும் எரிச்சல் ஏற்படும். இதற்கு பேடுகளில் இருந்து வெளிவரும் நறுமணம், சிந்தெடிக் மெட்டீரியல் மற்றும் கெமிக்கல்கள் தான் காரணம். ஆனால், சம்மர் சீசனில் பிறப்புறுப்பு பகுதியில் அதிகமான வியர்வை இருக்கும். இதனாலும் அதிகமான எரிச்சல் ஏற்பட்டு மாதவிடாய் சொறி ஏற்படக்கூடும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட அடிக்கடி நேப்கின்களை மாற்றுவது சிறந்த வழியாக இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் அரிப்புக்களை சமாளிக்க ஒரு சில வழிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உள்ளாடை அணிவதில் கவனம்

மாதவிடாய் காலங்களில் பருத்தி உள்ளாடைகளை அணிவது சரியான காற்றோட்டத்தை வழங்குகிறது. அவ்வாறு அணிவதால் அந்த பகுதிகளில் காற்று சென்று வியர்வையை தடுக்கிறது. மேலும், இது சொறி ஏற்படுவதற்கான வாய்ப்பை முழுவதுமாக குறைக்கிறது. மேலும், பீரியட்ஸ் நேரங்களில் ஜீன்ஸ் மற்றும் ஜெங்கிஸ் போன்ற இருக்கமான ஆடைகளை அணிவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பீரியட்ஸ் நேரத்தில் தளர்வான மற்றும் வசதியான பேண்ட் அல்லது பாவாடைகளை அணிவது ரொம்ப நல்லது. ஏனெனில், இது வியர்வையை குறைத்து பாக்டீரியா உற்பத்தியாவதை குறைக்கும்.

சரியான பேடுகளை தேர்ந்தெடுப்பது அவசியம்

இந்த மாதிரியான நேரங்களில் பேடுகளை பயன்படுத்துவதால் தொடை மற்றும் பிறப்புறப்பு பகுதிகளில் தடிப்புகள், அரிப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால், உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு சரியான பேடைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். அந்த வகையில், மென்மையான் வெளிப்புற அடுக்குகளை கொண்ட விரைவாக உறிஞ்சக்கூடிய நாப்கின்கள் சிறந்த தேர்வு. ஒருவேளை, உங்களுக்கு மிகவும் மிருதுவான சருமமாக இருந்தாலோ அல்லது ஒவ்வொரு முறையும் பீரியட்ஸ் ஆகும்போதும் தீவிர சொறி ஏற்பட்டாலோ, உடனே யோசிக்காமல் ஆர்கானிக் அல்லது பருத்தி பேடுகளுக்கு மாறுவது நல்லது.

மென்சுரல் கப் பயன்படுத்தலாம்

சானிட்டரி பேடுகளை விட மென்சுரல் கப்கள் சிறந்த தேர்வு. ஏனெனில், மென்சுரல் கப்கள் அதிக ரத்தப்போக்கை தக்கவைத்துக் கொள்ளகூடியவை. இவை மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. பொதுவாக மென்சுரல் கப்கள் நுண்ணுயிரிகளை அழிக்க கூடியது. இதை அப்புறப்படுத்துவதும் எளிது. மேலும், பீரியட்ஸ் காலத்தில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே, நாப்கின்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தி பாருங்கள். ஒவ்வொரு பெண்களுக்கும் அளவு வித்தியாசப்படும். எனவே, சரியான அளவில் வாங்கி முறைப்படி பயன்படுத்துங்கள்.

சில குறிப்புகள்:

  • ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 லிருந்து 9 கிளாஸ் தண்ணீர் குடிங்க.
  • மாதவிடாய் காலத்தில் பேடுகளை அடிக்கடி மாற்றினால் சொறி மற்றும் பல தொற்றுநோய்களில் இருந்து தப்பிக்கலாம். குறைந்து 6 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது பேடுகளை மாற்றிவிடுங்கள்.
  • தடிப்புகளை போக்க பேபி பவுடரை பயன்படுத்தலாம். ரொம்ப ஹார்ஸான பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்படி மிகவும் ஹார்ஸான பவுடரை பயன்படுத்தினால் அந்த பிரச்சனை மேலும் அதிகரித்து விடும். எனவே, கவனமாக இருங்கள்.
  • பிறப்புறுப்பை சில மணிநேரங்களுக்கு ஒருமுறையாவது வெதுவெது நீரால் கழுவுங்கள். ரொம்ப சூடாக இருக்க கூடாது.
  • முக்கியமாக, பிறப்புறுப்பை சோப்பு கொண்டு சுத்தப்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சோப்பில் இருக்கும் கெமிக்கல் உங்களுடைய பிறப்புறுப்பு pH அளவை குறைத்து, வறட்சியை ஏற்படுத்தும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website