‘நா ரெடி’ பாடல் சர்ச்சை: நடிகர் விஜய்க்கு பறந்த போலீஸ் நோட்டீஸ்

June 27, 2023 at 5:49 pm
pc

‘நா ரெடி’ பாடல் சர்ச்சை குறித்த புகார் தொடர்பாக நடிகர் விஜய்க்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

‘லியோ’ பாடல் சர்ச்சை

தற்போது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின் உட்பட பலர் நடித்து வருகின்றனர். 

நடிகர் விஜய்க்கு போலீஸ் நோட்டீஸ்

ஆனால், ‘லியோ’ படத்தில் இடம் பெற்ற ‘நா ரெடி’ பாடல் தொடர்பாக நடிகர் விஜய் மீது போலீசில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். 

‘லியோ’ படத்தில் இடம் பெற்ற ‘நா ரெடி’ பாடல் வரிகள் சமூககத்தில் போதைபொருள் பழக்கத்தை ஆதரிக்கப்பதாகவும், சமூக சீர்கேடுகளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 22ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ‘லியோ’ படத்தில் இடம் பெற்ற ‘நா ரெடி’ பாடல் வெளியானது. இப்பாடல் வெளியிட்ட சில மணி நேரத்தில் மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனைப் படைத்துள்ளது.

மேலும், நடிகர் விஜய் மீது இந்திய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்

இந்நிலையில், ‘லியோ’ பட பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யின் பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், நடிகர் விஜய் மீதுபுகார் அனுப்பியதால் விஜய் ரசிகர்கள் தன்னை கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் ஆர்.டி.ஐ. செல்வம் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.           

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website