நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக மாற்றும் இயற்கை உணவுகள் …..!!

June 27, 2022 at 1:39 pm
pc

நாம் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க கண்ட கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், நிறைய பணத்தையும் செலவிடுகிறோம். இதற்கு முன் கொஞ்சம் உங்கள் சமையலறைக்கு சென்று பாருங்கள். அங்கு அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது. நீங்கள் கேக்கலாம் இந்த அதிக விலைமதிப்புடைய கிரீம்களில் இல்லாதது அப்படி என்ன அதில் இருக்கிறது என்று.

கிரீம்களும் பயனளிக்கின்றன நான் அதை மறுக்கவில்லை. ஆனால், ஒன்றை நீங்கள் நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த கிரீம்கள் எதில் தயாரிக்கப்படுகிறது என்று நமக்கு தெரியும். முழுக்க முழுக்க கெமிக்கல் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இவை நம் சருமத்திற்கு நல்லது அல்ல.

அனைத்து கிரீம்களும் கெட்டது கிடையாது. அதற்கு பதிலாக நீங்கள் இயற்கை பொருட்களையே பயன்படுத்தலாம். இதற்கு அதிக பணமும் செலவாகாது. உங்கள் முகப் பொழிவிற்கு பயன்படுத்த வேண்டிய சில இயற்கை பொருட்கள் இதோ!!

1. இளநீர்

உங்கள் சருமம் மிகவும் வறண்டு அறிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதா? அதற்கு சரியான தீர்வு இளநீர் தான். இது சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. முதலில், இளநீருடன் 2 tbsp அன்னாசி பழச் சாற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். அது நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவுங்கள். இது மிகவும் ஈஸியான முறையாகும்.

2. முட்டைக்கோஸ்

முகம் பொழிவடைய மிகவும் ஈஸியான முறை உள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை, முட்டைக்கோஸ் தான். முட்டைக்கோஸை தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் முகத்தை கழுவுங்கள். இதை வாரத்தில் இரு முறை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் முகத்தில் பளபளப்பை உணர முடியும்.

3. தயிர் மற்றும் ஆலிவ் ஆயில்

தயிர் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்தை ஈரமாக்கி முகத்தை பிரகாசமாக்குகிறது. நிமிடத்தில் முகம் பொழிவு பெற வேண்டுமா, கொஞ்சம் தயிர் இருந்தால் போதும். எப்படி அப்ளை செய்வது. முதலில், 3 tbsp தயிர் மற்றும் 1 tbsp ஆலிவ் ஆயில் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்கு கலக்கி முகத்தில் தடவி, உலரும் வரை வைத்திருங்கள். பின்பு வெதுவெதுபான தண்ணீரில் கழுவி விடுங்கள். இதை வாரம் இரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website