நிர்வாணமாக நடிப்பது பெரிய விஷயம் அல்ல..!அதிரவைத்த நடிகை அமலா பால்…

May 23, 2023 at 7:07 am
pc

நடிகை அமலாபால் ,( Amala Paul) தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஒரு நடிகை. தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மைனா படத்தில், அறிமுகமானார். தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இயக்குநர் விஜய் திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

மிக வித்யாசமான, துணிச்சலான கேரக்டரில் நடிப்பதில் அமலாபால் ஆர்வம் மிக்கவர். ஆடை படத்தில், உடம்பில் துணி இல்லாமல் நடித்து, ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தவர்.

இப்போது, நடிகை அமலா பால் ‘ஆடு ஜீவிதம்’ என்ற படத்தில், பிருத்விராஜ் மனைவியாக நடித்து வருகிறார். இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கும் இப்படத்தில் நஜீப் முகமது என்ற கேரக்டரில் நடிகர் பிருத்விராஜ் நடிக்கிறார். மலையாள எழுத்தாளரான பெஞ்சமின் எழுதிய ஆடு ஜீவிடம் நாவலை அடிப்படையாக வைத்து, இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கடன் பிரச்சனையால் அவதிப்படும் பிருத்விராஜ், நிறையபணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். அதற்காக வெளிநாடு செல்லவும் முடிவு செய்கிறார். அதன்பின், சவுதி அரேபியாவுக்கு பிருத்விராஜ் செல்கிறார்.

அங்கு ஆடு மேய்க்கும் வேலைதான் அவருக்கு கிடைக்கிறது. ஆடு மேய்க்கும் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை யதார்த்தமாக சொல்லும் படம் தான் அடு ஜீவிதம். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் இப்படத்தில் பணியாற்றுகிறார் என்பது சிறப்பு தகவல்..

சமீபத்தில் வெளியான ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர், பரபரப்பை ஏற்படுத்தியது. பாலைவனத்தில் ஆடு மேய்க்கும்போது பிருத்விராஜ் படும் கஷ்டங்களை காட்டும் பரிதாப காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என்பது ட்ரைலரில் தெரிகிறது.

இதில், இடம்பெற்றுள்ள ‘லிப்லாக்’ காட்சி ரசிகர்களை சூடேற்றி உள்ளது. உடலில் ஆடையின்றி நடிக்கும் அமலா பால், முத்தக்காடசியில் நடிப்பதை விட, இதுபோன்ற காட்சியில் பிருத்விராஜ் நெருக்கமாக நடித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, நடிகை அமலா பால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பதில் தந்துள்ளார். ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் கதையை சொல்லும் போது, ப்ரித்விராஜ் லிப்லாக் காட்சியைப் பற்றி, என்னிடம் தெளிவாக கூறி விட்டனர். மேலும் படத்திற்கும், கதைக்கும் இந்த முத்தக்காட்சி அவசியமானதாக இருந்தது,

காட்சிக்கு தேவைப்பட்டதால் அதில் இருவரும் சந்தோஷமாக நடித்தோம்.. மேலும் இதற்கு முன்பாக, தமிழில் ‘ஆடை’ படத்தில் நிர்வாணமாக நடித்தேன். படத்தின் கதை, அவ்வாறு கதையில் வரும் என் கேரக்டருக்காக நான் அப்படித்தான் நடிக்க முடியும். இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை, என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website