நிவாரண பணத்துக்காக ஒடிசா ரயில் விபத்தில் கணவனை கொன்ற மனைவி!

June 9, 2023 at 11:38 am
pc

ஒடிசா நிவாரணப் பணத்தைப் பெறுவதற்காக ரயில் விபத்தில் கணவன் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவியின் மோசடி செயல் அம்பலமானது. இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பாலசோர் ரயில் விபத்தில், மாநில அரசும், ரயில்வேயும் அறிவித்த இழப்பீட்டுத் தொகைக்காக, தன் கணவர் இறந்துவிட்டதாக மோசடி செய்ய முயன்ற பெண் சிக்கலில் சிக்கியுள்ளார்.

கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவைச் சேர்ந்த கீதாஞ்சலி தத்தா, ஜூன் 2-ஆம் திகதி நடந்த விபத்தில் தனது கணவர் பிஜய் தத்தா இறந்துவிட்டதாகவும், ஒரு உடலை தனது கணவருடையது என அடையாளம் காட்டுவதாகவும் கூறியிருந்தார். ஆனால், ஆவணங்களைச் சரிபார்த்ததில், அவரது கோரிக்கை பொய்யானது எனத் தெரியவந்தது.

பொலிஸார் எச்சரித்து அவரை விடுவித்த போதிலும், இப்போது அவரது கணவர் மணியபந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அப்பெண் தற்போது தலைமறைவாகி விட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுப் பணத்தை அபகரிக்க முயன்றதற்காகவும், தனது மரணத்தைப் பொய்யாக்குவதற்காகவும் கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிஜாய் கோரியுள்ளார்.

இதற்கிடையில், தலைமைச் செயலாளர் பிகே ஜெனா, உடல்கள் மீது போலி உரிமைகோருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே மற்றும் ஒடிசா காவல்துறையை கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்தார், பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்தார். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜூன் 2 அன்று இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது, அதன் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன. அதே நேரத்தில் அந்த வழியாகச் சென்ற பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸின் கடைசி சில பெட்டிகள் மீது கோரமண்டலின் சில பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 288 பேர் இறந்தனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website