நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா?

ஏழைகளின் ஆப்பிளாக இருக்கும் கொய்யா பழம் இதய ஆரோக்கியத்தினையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகின்றது. கொய்யா பழத்தின் சத்துக்கள், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு அதிக வைட்டமின் சி சத்துக்கள் இருக்கும் கொய்யா பழத்தில், இரும்புச்சத்து, கால்சியம், ஆன்டி ஆக்சிடன்டுகள் காணப்படுகின்றது.
வெறும் 100 கிராம் கொய்யா பழத்தில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, புரோட்டின், கொழுப்புச் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் காணப்படுகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், ஆரோக்கிய சருமத்திற்கு காரணமான கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றது.
கண் பார்வையை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல், வயிற்று பிரச்சினை, செரிமான பிரச்சினையை தீர்க்கின்றது.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள் செல்களுக்கு ஏற்படும் சேதங்களை தடுக்கின்றது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன், இதயத்தின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை அளிக்கின்றது.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
கொய்யாப் பழத்தில் குறைந்த கிளைசிமிக் அளவு மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவு சரியாக பராமரிக்கப்படுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் கொய்யாப்பழத்தை மிதமான அளவுகளில் சாப்பிட வேண்டும். உடல் எடையைக் குறைப்பவர்களும் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்டு எடுத்துக்கொள்ளவும்.