நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் நித்ய கல்யாணி..!

April 9, 2023 at 11:03 am
pc

நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் நித்ய கல்யாணி உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுமட்டுமல்லாமல் இன்னும் சில மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது.
நீரிழிவு நோய் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகவும் பொதுவான நோயாக மாறியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அதற்கு இரையாகி வருகின்றனர். இதற்கான காரணம் மரபணுவாக இருக்கலாம். ஆனால் பொதுவாக இது மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு காரணமாக வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், ரத்தத்தில் உயர் சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய மூலிகையான நித்ய கல்யாணி பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.


நீரிழிவு நோய்க்கு எதிரி :


நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் பேசும்போது, குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த விலையுயர்ந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. சில வீட்டு மற்றும் இயற்கை வைத்தியம் மூலம் விரும்பிய முடிவைப் பெறலாம் என தெரிவித்திருக்கிறார். அந்தவகையில் பார்க்கும்போது இயற்கை மூலிகையான நித்ய கல்யாணி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உங்களுக்கு உதவியாக இருக்கும்.


நித்ய கல்யாணியின் பலன்கள் :


நித்ய கல்யாணி செடி பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் மட்டுமல்ல, தொண்டைப்புண், ரத்தப் புற்றுநோய், மலேரியா போன்ற நோய்களுக்கும் இது மூலிகை மருந்தாகும். இந்த தாவரத்தில் ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற முக்கியமான சேர்மங்கள் காணப்படுகின்றன. இது தவிர, இந்த தாவரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆல்கலாய்டுகள் உள்ளன, அவை நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.


நித்ய கல்யாணி அமைப்பு :


இந்த செடி இந்தியாவிலும் எளிதாகக் காணப்படுகிறது. அதன் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதனால் தான் பலர் இதை அலங்காரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இதன் பச்சை இலைகள் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக செயல்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது. இது நீரிழிவு நோயாளிகளின் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.


நித்ய கல்யாணியை எப்படி பயன்படுத்துவது?


நித்ய கல்யாணி இலைகளை வெயிலில் காயவைத்து பின் அரைத்து காற்று புகாத பாட்டிலில் வைக்கவும். இந்த பொடியை தண்ணீர் அல்லது புதிய பழச்சாறுடன் கலந்து தினமும் உட்கொள்ளவும். நீங்கள் விரும்பினால், தினமும் 2 முதல் 4 இலைகளை மென்று சாப்பிடலாம். இதன் இளஞ்சிவப்பு பூக்களில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. இந்தப் பூக்களை ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து, பின் சல்லடையில் வடிகட்டவும். இப்போது இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website