நெருங்கிய தோழியின் கருவை தன் வயிற்றில் சுமந்த பெண்.

October 23, 2022 at 10:35 am
pc

தனது நெருங்கிய தோழிக்காக பெண் ஒருவர் செய்த காரியம் தொடர்பான செய்தி, பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. லண்டனை சேர்ந்தவர் கேஸ்ஸி புஷ் (Cassie Bush). கடந்த 2016 ஆம் ஆண்டின் போது, இவரது உடலில் திடீரென ரத்த போக்கு உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால் கேஸ்ஸி புஷ் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், தனது பார்ட்னர் ஜாக்கிடம் இது பற்றி அவர் தெரிவித்துள்ளார். அவரும் மருத்துவரை அணுகலாம் என தெரிவித்து, மருத்துவமனைக்கும் கேஸ்ஸியை அழைத்து சென்றுள்ளார்.

அங்கே அவரை பரிசோதித்த போது கடும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. கேஸ்ஸிக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரிய வந்ததையடுத்து, மற்றொரு திடுக்கிடும் தகவலும் உறுதியாகி உள்ளது.

கேஸ்ஸியின் கர்ப்பப்பை வரை புற்றுநோய் பரவி இருந்த காரணத்தினால், இனிமேல் அவரால் குழந்தையை பெற்றுக் கொள்ளவே முடியாது என்றும் இளம் வயதிலேயே ஒரு சோதனை அவருக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக, கேஸ்ஸி – ஜேக் தம்பதி கடுமையான துயரில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். மறுபக்கம், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஏங்கி வந்துள்ளார் கேஸ்ஸி புஷ்.

அதே வேளையில், தனது கருமுட்டையையும் கடந்த 2017 ஆம் ஆண்டு கேஸ்ஸி பதப்படுத்தி வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், கேஸ்ஸியின் நெருங்கிய தோழியும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான பெக்கி சிடல் என்ற பெண், தனது தோழிக்காக வாடகைத் தாயாகவும் மாற முடிவு செய்துள்ளார்.

இதற்கு பெக்கியின் கணவரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கருவுற்றிருக்கிறார் பெக்கி. தொடர்ந்து, கடந்த சில மாதங்கள் முன்பு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார் பெக்கி.

இது பற்றி பேசும் கேஸ்ஸி – ஜாக் தம்பதி, தாங்கள் எப்போதுமே பெக்கிக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம் என்றும் எங்கெளுக்கென குழந்தை கிடைத்திருக்கிறது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தற்போது குழந்தையின் பெற்றோர்கள் தாங்கள் தான் என்பதை பதிவு செய்யும் வேலைகளிலும் ஜாக் மற்றும் கேஸ்ஸி ஆகியோர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. குழந்தை பெற முடியாமல் ஏங்கி வெந்த பெண்ணுக்கு அவரது தோழி செய்த உதவி தொடர்பான செய்தி, பலரையும் உருக வைத்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website