நேபாளம் ஹோட்டலில் செஃப் ஆக மாறிய நடிகர்அஜித்.. வைரல் வீடியோ..!

April 27, 2023 at 1:05 pm
pc

நடிகர் அஜித் மீண்டும் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் நேபாள நாட்டில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம். நேபாள நாட்டில் உள்ள அஜித் ரசிகர்கள் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேபாள நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் அஜித் செஃப் ஆக மாறிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நேபாள நாட்டில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் அஜித் அங்குள்ள சமையல் செய்யும் இடத்திற்கு சென்று செஃப்களுடன் உடன் சேர்ந்து சமையல் செய்யும் வீடியோ அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஒரு கைதேர்ந்த செஃப் ஆக மாறி சக செஃப்களுடன் உடன் அவர் உணவு சமைக்கும் வீடியோவை பார்த்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே அஜித் பிரியாணி உள்பட பல உணவுகளை சமைப்பதில் கை தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website