நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி!

February 5, 2023 at 6:25 am
pc

பொதுவாக வீடுகளிலிருக்கும் குழந்தைகளுக்கு கடினமான சாப்பாடுகள் கொடுத்தால் எடுத்துக் கொள்ள மாட்டார், காரணம் என்ன தெரியுமா? அவர்களுக்கு அதனை மென்று சாப்பிடும் அளவிற்கு பொறுமை இருக்காது, அத்துடன் அதனை மென்று சாப்பிட தெரியமாலும் இருக்கலாம்.

இதனால் குழந்தைகள் ரொட்டி, பாண், சப்பாத்தி இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது குறைவாக இருக்கும். இவர்களுக்கு கஞ்சி, சூப், நூடில்ஸ் போன்ற இலகுவாக சாப்பிடும் அளவிற்கு உணவுகளை கொடுப்பார்கள்.

மேலும் நாம் ஏதாவது ஒரு நோயில் சிக்கிக் கொண்டிருக்கும் போது நமக்குமே மென்று சாப்பிடுவது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் நாமும் இது போன்று உணவுகள் எடுத்துக் கொள்ள விரும்புவோம்.

அத்துடன் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானகவும், மற்றும் மென்மையாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு எனின் அது போல் என்ன உணவு இருக்கிறது என்றா யோசிக்கீறிர்கள்.

ஆம், நாம் சத்தான, மென்மையான உணவு என்றால் சிக்கிரம் ஞாபகத்திற்கு வருவது கஞ்சி தான். இது ஒரு ஆரோக்கியம் நிறைந்ததும் இலகுவில் சமிபாடு அடையக்கூடிய உணவாகவும் காணப்படுகிறது.

அந்தவகையில் வீட்டிலுள்ள காய்கறிகளை வைத்து எவ்வாறு ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – 2 மேசைக்கரண்டி

கேரட் – சிறியது 1

பீன்ஸ் – 2

முட்டை கோஸ் – 25 கிராம்

இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு – 2 பல்

பச்சை மிளகாய் – 1(தேவைப்பட்டால்)

வெஜ் ஸ்டாக் பவுடர் – கால் தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்)

மிளகு தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எப்படி செய்யலாம் தெரியுமா?

முதலில் கஞ்சிக்கு தேவையான கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், இஞ்சி, ப.மிளகாய் என்பவற்றை நன்றாக கழுவி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து ஒரு 2 கப் தண்ணீர் ஊற்றி, அதனுள் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், வெஜ் ஸ்டாக் பவுடர், உப்பு என்வற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் பார்க்கும் போதே தெரியும் நன்றாக கொதிக்கும் நிலை, அதில் நறுக்கிய காய்கறிகள் அதாவது கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் என்பவற்றை சேர்த்து சுமார் 10 தொடக்கம் 15 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் காய்கறிகள் வெந்து விட்டதா? என பார்த்து விட்டு கொதித்திருந்தால் அதில் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் ஆவலுடன் காத்திருந்த ஆரோக்கியமான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி தயார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website