பச்சிளம் குழந்தையை 14வது மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய்!

மராட்டிய மாநிலத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் தனது பெண் குழந்தையை 14வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியான முலுண்ட்டில், மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் 14வது மாடி குடியிருப்பில் இருந்து சன்னல் வழியாக தனது குழந்தையை தூக்கி வீசியுள்ளார்.
பிறந்து 39 நாட்களே ஆன அந்த குழந்தையை மீட்ட மாமா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் பாதி வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான பெண் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை அவர் கைது செய்யப்படாத நிலையில், அவர் எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து விவரம் உடனடியாக தெரிய வரவில்லை.
இதற்கிடையில், 2022ஆம் ஆண்டில் அப்பெண்ணின் 7 மாத மகன் உணவளிக்கும்போது மூச்சுத்திணறல் காரணமாக இறந்தது குறித்தும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.