பரங்கிக்காய் இனிப்பு கறி இப்படியும் சமைக்கலாமா …? தெரிஞ்சிக்கலாம் வாங்க …!!

January 15, 2023 at 8:10 am
pc
தேவையானபொருட்கள்

பரங்கிக்காய் – கால் பகுதி
தேங்காய் துருவல் – கால் கப்
வெள்ளை உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
வெல்லம் – எலுமிச்சை அளவு

செய்முறை
  • பரங்கிக்காயை மெல்லியதாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் பரங்கிக்காயை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
  • காய் நன்கு வதங்கியதும் அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு காரம் காயுடன் சேரும்படி பிரட்டி விடவும்.
  • மிளகாய் நெடி அடங்கும் வரை நன்கு வதக்கி விடவும்.அதன் பிறகு ஒரு தட்டை வைத்து மூடி காயை வேக விடவும்.
  • 7 நிமிடம் வரை காய் வேக வேண்டும் இல்லையென்றால் சாப்பிடும் போது சற்று அழுத்தமாக இருக்கும்.7 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறிய பிறகு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு ஒன்றாக கிளறி விடவும்.
  • அதன் பின்னர் வெல்லத்தை தூள் செய்து எடுத்துக் கொள்ளவும். அதை பரங்கிக்காய் வெந்ததும் அதனுடன் போட்டு நன்கு கிளறி விடவும்.
  • பிறகு வெல்லம் கரைந்து காயுடன் சேர்த்து வெல்ல வாசனை குறைந்து நன்கு கெட்டியான பதம் வரும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விடவும்.பரங்கிக்காய் இனிப்பு கறி ரெடி. இதை வற்றல் குழப்புடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website