பலரும் அறிந்திராத கொய்யாப்பழம் குறித்த அற்புத மருத்துவ குணங்கள்!

October 17, 2022 at 2:03 pm
pc

தினமும் நாம் ஒவ்வொரு பழங்கள் எமது உணவுடன் சேர்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் பழங்களில் அதிகளவான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடலுக்குத் தேவையான பலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அந்த வகையில் இத்தனை ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய கொய்யாப்பழம் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

கொய்யாப்பழத்தில் அதிகமான வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன. இது உடலில் ஏற்படும் தோல் சம்பந்தபட்ட பிரச்சினைகளை வராமல் தடுகிறது.

மேலும் இப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

வயிற்றுவலி பிரச்சினை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொள்வது சிறந்தது. ஏனெனில் இந்த பழம் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடையச் செய்யும், இதனால் வயிற்று புண்கள் மற்றும் வயிற்றுள்ள தீரா நோய் குணமடைய அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

கொய்யா பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். இதில் காணப்படும் சில பதார்த்தங்கள் டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது. ஆகவே பயமின்றி எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பழத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதனை மருந்தாகவும் பயன்படுத்த முடியும்.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வருவதால் வைட்டமின் சீ குறைப்பாட்டால் ஏற்படும் எந்தவொரு பிரச்சினையும் வராது மற்றும் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website