பலவித நோய்களை விரட்டியடிக்கும் மாவிலை நீர்!

July 23, 2022 at 6:55 am
pc

பொதுவாக மா மரத்தின் இலை, மலர்கள், காய், கனி, வேர்ப் பட்டை மற்றும் பிசின் உள்ளிட்ட அத்தனை பாகங்களும், மனிதர்களின் உடல் நலனுக்கு அரிய தீர்வாகிறது. மாவிலைகளில் புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின் A, B மற்றும் C நிரம்பியிருக்கிறது. சிறந்த கிருமி நாசினி மற்றும் வியாதி எதிர்ப்பு சக்தி மிக்கது. இதன் இலைகளை கொதிக்க வைத்து எடுத்து கொள்வது இன்னும் பல பயன்களை தருகின்றது. அந்த வகையில் மாவிலை நீரை எடுத்து கொள்வதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

* மாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது தேன் கலந்து பருகி வர, இரத்தக் குழாய் அடைப்புகளால் உண்டாகும் வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் வியாதிகளை போக்கி, இரத்த அழுத்த குறைபாடுகளை சரி செய்யும்

* மாவிலைத் தேநீர் அவ்வப்போது பருகி வர, உடலின் நச்சுக்கள் வெளியேறி, உடல் நலமாகும்.

* மாங்கொழுந்து இலைகளை சற்று சூட்டில் வதக்கி எடுத்து, தேன் கலந்த தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் அந்த தேன்மா நீரைப் பருகி வர, சுவாச பாதிப்புகளால் ஏற்பட்ட தொண்டைக் கட்டு, பேச முடியாமல் குரல் கம்முவது போன்ற பாதிப்புகள் விலகும்.

* மாங்கொழுந்து இலைகளை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி வைத்துக் கொண்டு, அந்த பொடியை தினமும் இருவேளை நீரில் கலந்து பருகி வர, சர்க்கரை பாதிப்புகள் குணமாகும்.

* மாவிலைப் பொடியை இரவில் ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலை பருகி வர, சிறுநீரக கற்கள் உடைந்து வெளியேறி விடும்.

* மாவிலைப் பொடியைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர, ஈறுகள் பலமடைந்து, பற்கள் உறுதியாகும். வாய்ப்புண், வாய் துர்நாற்றம் விலகும்.

* மாவிலையை நெருப்பில் இட்டு அந்த சாம்பலை, வெண்ணையில் குழைத்து தீக்காயங்களின் மேல் தடவி வர, அவை விரைவில் ஆறும்.

* மாவிலைச் சாற்றுடன், பொன்னாங்கண்ணி சாற்றை சேர்த்து, இவற்றை தேங்காய் எண்ணையில் கலந்து தலைக்கு தடவி வர, தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் விலகி, இள நரை மாறி, தலைமுடி கருகருவென வளரும்.

* மாவிலைகளை தண்ணீரில் நன்கு காய்ச்சி, அதை தினமும் பருகி வர, மாலைக் கண் போன்ற கண் பார்வைக் குறைபாடுகள் அகலும்.

* சிறிது மாவிலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த சாற்றை வேதனை கொடுக்கும் காது வலி வந்த காதில், சில துளிகள் விட, காது வலிகள் விலகி ஓடி விடும்.

* சிறிது மாவிலைகளை குளிக்கும் நீரில் சற்று நேரம் ஊறவைத்தபின் குளித்துவர, உடல் சோர்வு மற்றும் மன வாட்டங்கள் நீங்கி, புத்துணர்வு பெறலாம்.

* மாங்கொழுந்து இலைகளுடன் நாவல் மரக் கொழுந்து இலைகளை சேர்த்து, தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, தண்ணீர் சுண்டி வந்த பின், ஆற வைத்து சிறிது தேன் கலந்து, இவ்விலைச் சாற்றை பருகி வர, வாந்தி நிற்கும்.

* மா மரப்பட்டைகளில் வடியும் பிசினை, பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வர, பாத வெடிப்புகள் யாவும் மறைந்து விடும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website