பல இளைஞர்களை ஏமாற்றி கல்யாணம் செய்துக்கொண்ட கரூரின் இன்ஸ்டா ராணி கைது!

April 17, 2023 at 3:39 pm
pc

இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம் பெண், பணத்திற்கு ஆசைப்பட்டு கல்யாண தரகர்களுடன் கைகோர்த்து கம்பம், விருதுநகர், கரூர், ஈரோடு என பல்வேறு பகுதிகளில் 5-ற்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து நூதன மோசடியில் ஈடுப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த திருமண மோசடி கும்பல் போலீசில் சிக்கியது.ஏமாற்றப்பட்ட இளைஞர் பொலிஸாரின் உதவியுடன் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

பைனான்சியருக்கு திருமணம்!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். 34 வயதான இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்ப்பது தெரிந்து கோவில்பட்டியை சேர்ந்த தரகர்கள் பாலமுருகன், அமிர்தவள்ளி ஆகியோர் பொன்தேவியை வரன் பாரத்து தந்துள்ளார்.கரூரை அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள விக்னேஸ்வரனின் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று பொன்தேவியை பாலமுருகன் திருமணம் முடித்துள்ளனர்.

மாயமாகிய பொன்தேவி!

அத்தோடு தரகர்கள் பொன்தேவிக்கு பெற்றோர் இல்லை சித்தி தான் வளர்த்துவருகிறார்கள் எனக்கூறியுள்ளனர்.மேலும் மாப்பிள்ளை இவருக்கு தங்கத்தாளி மற்றும் ப்ரேஸ்லேட் தங்கநகைகள் என 8 ¼ பவுனிற்கு நகைகள் போட்டுள்ளார்.மேலும் பொன் தேவி அவரின் சித்தி வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக்கூறி அங்கு சென்று ரூ.8500 பணத்தை வாங்கி சித்தியோடு சென்ற மாயமாகிவிட்டாராம்.பொன்தேவியின் சித்தியைப்பிடித்து விசாரித்ததால் தான் பொன்தேவி ஏமாற்றிய உண்மை தெரியவந்தது.

மேலும் அவினாசிபாளையத்தில் ஒரு இளைஞரை திருமணம் செய்து ரூ.35000 பணத்தை ஏமாற்றியுள்ளார்.பின்னர் இவ்விளைஞர் பொன் தேவியை தேடியுள்ளார் அப்போது மதுரையிலுள்ள ஒரு உணவகத்தில் வேறோரு இளைஞரோடு கைக்கோர்த்தபடி வந்தபோது இந்த ஏமாற்றப்பட்ட இளைஞன் அதிர்ச்சியடைந்து பொன்தேவியை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து பைனான்சியர் விக்னேஷ்வரனிற்கும் தகவல் வழங்கப்பட்டு இடைத்தரக்கர்களான பாலமுருகன், அமிர்தவள்ளி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website