பாதங்கள் குளிர்ச்சியாவும் உடல் சூடாகவும் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருங்கள் இது இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் …!!

November 3, 2022 at 5:18 pm
pc

பாதங்களில் குளிர்ச்சியான உணர்வை அனுபவிப்பவர்களாக இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே பார்க்கலாம்.கால்கள் உடலின் மற்ற பகுதிகளை விட குறைந்த வெப்பநிலையில் இருக்கும் போது குளிர்பாதங்கள் உண்டாகும். இதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.

உடலின் மற்ற பகுதிகளை காட்டிலும் கால்கள் குறைந்த வெப்பநிலையில் இருந்தால் இந்த குளிர்ந்த பாதங்கள் உண்டாகும். கைகள் சூடாக இருக்கு. ஆனால் பாதங்கள் பனியில் இருப்பது போல் இருக்கும்.இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குளிர் காலநிலையில் இருக்கும் போது இவை உண்டாகலாம். அதே நேரம் தீவிர மருத்துவ நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம். கால்களில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது இப்படி உண்டாகலாம்.

​குளிர்ந்த பாதங்கள் யாருக்கு பாதிப்பை உண்டு செய்யும்?

குளிர்பாதங்கள் பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் குளிர்ந்த பிரதேசத்தில் இருந்தால் உங்களுக்கு குளிர்ந்த கால்கள் இருப்பது நார்மல்.

இவை தவிர ஆட்டோ இம்யூன் நிலைமைகள்

சுழற்சி சிக்கல்கள்

ஹார்மோன்களை பாதிக்கும் நிலைமைகள்

நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நிலைமைகள் போன்றவற்றின் போது இவை இருக்கலாம்.

குளிர்ந்த பாதங்கள் அசெளகரியத்தை உண்டு செய்யலாம். உங்கள் உடலின் மற்ற பகுதிகள் சூடாக இருக்கும் போது கால்கள் சூடாக இல்லை எனில் உடலின் மற்ற பகுதிகளை போன்று கால்கள் வெப்பநிலைக்கு வரும் வரை கால்களில் இலேசான வலி இருக்கலாம்.குளிர்கால்கள் தற்காலிகமானதாக இருக்கலாம். ஆனால் குளிர் பாதங்கள் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

குளிர் கால்களின் அறிகுறிகள்

உங்களுக்கு எப்போதாவது குளிர்பாதங்கள் இருந்தால் எப்போதாவது அறிகுறிகளை அனுபவிக்கலாம். வெப்பநிலை குறையும் போது கால்களில் குளிரை உணரலாம். இந்த அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை அறிவோம்.

கால்கள் உடலின் மற்ற பகுதிகளை விட குறைந்த வெப்பநிலையில் இருக்கும்.

உங்கள் கால் மற்றும் கால்விரல்களில் இலேசான் துடிக்கும் வலியை உணர்வீர்கள்.

குளிர்ந்த வெப்பநிலையில் இருந்தால் பாதங்கள் விரைவில் குளிரலாம்.

கால்கள் உடலின் மற்ற பகுதிகளை விட வேறு நிறத்தில் (வெளிர், சிவப்பு, நீல அல்லது ஊதா) போன்று இருக்கலாம்.

இரவு பகல் என எப்போதாவது கால்களில் குளிரை அனுபவிப்பீர்கள்.

​குளிர் கால்களுக்கு அறிகுறியாக சில நோய்தாக்கங்கள் இருக்கலாம்

குளிர் கால்கள் அடிப்படை நிலையின் அறிகுறிகளாக இருக்கலாம். இரத்த ஓட்டத்தை பாதிக்கும் விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஆட்டோ இம்யூன் நிலைமைகள் (இரத்த சோகை)

இதய நோய்

ஹார்மோன் மாற்றங்கள் (ஹைப்போ தைராய்டிசம்)

குறுகிய தமனி அடைப்புகள் அல்லது சுருங்கிய இரத்த நாளங்கள்

நரம்பு நிலைகள் (ஃபைப்ரோமியால்ஜியா)

புற தமனி நோய்

போன்ற நிலைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

குளிர்கால்களுக்கு மருந்தின் பக்கவிளைவுகள்

சில மருந்துகள் இரத்த ஓட்டத்துடன் தொடர்புடையவை அதனால் கூட குளிர் கால்கள் அறிகுறிகள் உண்டாகலாம். குளிர் கால்களை உண்டாக்கும் மருந்துகள் உயர் இரத்த அழுத்தத்துக்கான பீட்டா- தடுப்பான்கள், தலைவலிக்கு எர்கோடமைன்

குளிர் மருத்துவத்தில் சூடோபெட்ரைன் போன்றவையாக இருக்கலாம்.

இது குறித்து மருத்துவரை அணுகினால் நீங்கள் எடுத்துகொள்ளும் மருந்துகளை கவனித்து மாற்று மருந்துகளை மருத்துவர் அறிமுகப்படுத்துவார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website