பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தமிழ் நடிகை லேகா காதல்…வைரல் புகைப்படம்

February 8, 2023 at 12:41 pm
pc

பாலிவுட் முன்னாள் நடிகர் இம்ரான் கான் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் இம்ரான் கானும் தென்னிந்திய நடிகை லேகா வாஷிங்டன்னும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் கைகோர்த்தபடி சுற்றி வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. வெளியான படங்களில், கருப்பு டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து எளிமையான தோற்றத்தில் இம்ரான் கான் இருக்கிறார். லேகா கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட அழகான உடை அணிந்துள்ளார். இருவரும் கைகளை பிடித்தபடி வெளியே வருகிறார்கள். விரைவில் அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதிலிருந்து நட்சத்திரங்கள் காதலிப்பது தெளிவாகத் தெரிகிறது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தனக்கும் லேகாவுக்கும் இடையேயான காதல் கிசுகிசுக்களுக்கு இம்ரான் கான் இதுவரை பதிலளிக்கவில்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website