பால் பற்கள் முளைப்பதால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன …!!

November 12, 2022 at 4:45 pm
pc

குழந்தையின் 29 வது வாரத்தில் குழந்தை சுற்றி இருப்பவர்களை அறிந்து கொள்வார்கள். மேலும் ஒலி போன்ற அடிப்படை வெளிப்புற தூண்டுதல்களுக்கும் பதில் அளிப்பார்கள். அவர்களுக்கு தேவையானதை கேட்டு பெறுவார்கள். இந்த வாரத்தில் குழந்தையிடமிருந்து பெற வேண்டியது என்ன என்பதை பார்க்கலாம்.

இது வெவ்வேறு அளவுகளில் இருக்கலாம். பால் பற்களை கொண்டிருக்கும் நேரம் இது. குழந்தைக்கு மூன்று பற்களேனும் வளர்ந்திருக்கும். பற்கள் இலேசாக வளைந்திருக்கும். சரியான சீரமைப்பில் இருக்காது. காலப்போக்கில் இவை தன்னைத்தானே சரி செய்துவிடும்.

குழந்தையின் கை மற்றும் கால்கள் முன்பை விட வலுவாக இருக்கும். இந்த நேரத்தில் உடல் வளர்ச்சிகள் மட்டும் அல்ல முதலாவதாக ஆமாம் என்பதயோ இல்லை என்பதையோ புரிந்து கொள்வார்கள். அவர்கள் சமயங்களில் பதில் அளிக்கவும் செய்வார்கள் என்றாலும் சுத்தமான உச்சரிப்பாக இருக்காது. சூழ்நிலைகளின் அடிப்படையில் மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ இருப்பார்கள். மேலும் தன்னை சுற்றி இருக்கும் சூழலை புரிந்துகொள்வார்கள்.இரவு பகலை புரிந்துகொள்வார்கள்.

குழந்தையின் மைல்கற்கள் வலுவான தசை அமைப்புடன் நிமிர்ந்து உட்காருவார்கள். எழுந்து நிற்பார்கள். ஆனால் இதை உங்கள் ஆதரவுடன் மட்டுமே செய்வார்கள். படிப்படியாக மட்டுமே தனித்து இயங்குவார்கள்.

இந்த நேரத்தில் அவர்களால் தனித்து இயங்க முடியாது. குழந்தையின் பேச்சு எல்லோருக்கும் புரியாது. குழந்தை உங்களுடன் உறவாட விரும்புவார்கள். எனினும் விரைவில் உங்களை தொடர்பு கொள்ள தொடங்குவார்கள்.

இந்த வாரத்தில் குழந்தை பேசுவது இல்லை என்றாலும் தாயின் பேச்சை புரிந்துகொள்ளும். தாயின் கோபத்தை உனரும் போது அழத்தொடங்கும். அவர்களை சமாதானப்படுத்துவதன் மூலம் சமாதானமடைவார்கள்.

குழந்தை இந்த நேரத்தில் நன்றாக வளர்ந்திருப்பார்கள். அவருக்கு ஏற்கனவே ப்யூரிகள். பழச்சாறுகள், பழக்கலவைகள் கொடுத்து பழகியிருப்பீர்கள். இதனால் எளிதில் உண்ணவும் ஜீரணிக்கவும் முடியும். தாய்ப்பாலுடன் இணை உணவை அதிகரிக்கும் நேரம் இது.

மேலும் குழந்தைகள் விரல் உணவுகளை வழங்குவதற்கான கூடுதல் பணிக்கான நேரம் கூட இது. உங்கள் குழந்தைக்கு பிடித்த உணவை தேர்வு செய்ய அவர்கள் முன் நான்கு ஐந்து வித உணவுகளை கொடுக்கலாம். அவர்களுக்கு ஏற்றதை அவர்களே தீர்மானித்துகொள்வார்கள்.

இந்த வாரத்தில் குழந்தையின் கால்கள் வலுவாக இருக்கும். குழந்தை விரலால் பிடித்து உணவை எடுக்கும் போது மூச்சுத்திணறலை உண்டு செய்யலாம். அதனால் குழந்தைக்கு உணவளிக்கும் போது இதை மனதில் கொள்ளுங்கள்.

​ குழந்தையின் தூக்கம்

குழந்தையின் தூக்கம் சில நேரங்களில் நீண்ட காலத்துக்கு தடையின்றி இருக்கும். எனினும் சமயங்களில் தூக்கத்தில் எழுவார்கள்.

குழந்தையின் பால் பற்கள் வளர ஆரம்பிக்கும் போது அவள் வலியை அனுபவிக்கலாம். இது வெளிப்படையாக அவளது தூக்க சுழற்சியை பாதிக்க செய்யும் இரவில் தூக்கத்தில் தலையிட செய்யும் என்றாலும் இது சாதாரணமானது. நீங்கள் படிப்படியாக குழந்தையை இதிலிருந்து வெளியேற்ற பல் துலக்குதலை செய்யலாம்.

உங்கள் குழந்தை வேகமாக வளரும் போது மூளையும் வளரும். குழந்தை தவழக் கற்றுகொள்ளும் போது தூக்க சுழற்சி பாதிக்கலாம் என்று ஆய்வு சொல்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website