பிகினி உடையில் இளம் நடிகருடன் நெருக்கமாக வாணி போஜன்!அதிர்ச்சி புகைப்படம்…

July 23, 2023 at 10:18 pm
pc

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் வாணிபோஜன் (Vani Bhojan) நயன்தாரா அளவுக்கு, சின்னத்திரை ரசிகர்களின் மனதை இவர் வென்றெடுக்க காரணம், இவரது அழகான முக வசீகரம்தான். வாணி போஜனின் துறுதுறு கண்களும், நீளமான நாசியும், பளபளக்கும் கன்னங்களும் பளீர் சிரிப்பும் ரசிகர்களை, வெகுசீக்கிரத்தில் அவரது பரம விசிறிகளாக மாற்றி விடுகிறது.

ஊட்டியைச் சேர்ந்த வாணி போஜன், துவக்க காலத்தில், விளம்பர படங்களில் நடித்து, அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதற்கு முன்பு, விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்திருக்கிறார்.

விஜய் டிவியில், ஒளிபரப்பான ‘ஆஹா’ தொடர் மூலம், சின்னத்திரை ரசிகர்களுக்கு வாணி அறிமுகமானார். அதன்பின், தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் தாசில்தாராக நடித்து, மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

வாணிபோஜன், தன் அழகிய தோற்றத்தாலும், திறம்பட்ட நடிப்பாலும் சினிமாத் துறையிலும் பிரவேசித்தார். லாக்கப், ஓ மை கடவுளே, மகான், காசிமேடு, ஆர்யன், லவ், காசினோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

டிவி சீரியலைப் போலவே, தமிழ் சினிமா படங்களிலும் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். இதுதவிர சில வெப் சீரிஸ்களிலும், இப்போது வாணிபோஜன் நடித்து வருகிறார்.கொரோனா தொற்று காலகட்டத்தில் அதாவது 2020 – 21 காலகட்டத்தில், ட்ரிப்பிள்ஸ் என்ற வெப் சீரிஸ்சில் வாணிபோஜன் நடித்தார்.

அவருக்கு ஜோடியாக ஜெய் நடித்தார். விவேக் பிரசன்னா, ராஜ்குமார் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இளம் ரசிகர்கள் மத்தியில், இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் நடித்த போது, ஜெய்க்கும் வாணி போஜனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து, ஜெய்யும், வாணியும் காதலர்களாக, கோலிவுட்டில் வலம் வந்தனர், லிவிங் டூ ரிலேஷன்சிப் முறையில், ஒரே வீட்டில் திருமணம் செய்யாத தம்பதியாக வாழ்ந்ததாக தகவல்கள் பரவியது.

ஒரு கட்டத்தில் ஜெய், வாணி இருவரது சினிமா கேரியரும் அவர்களாலேயே பாதிக்கப்படுவது தெரிந்து, சினிமாவில் மீண்டும் வெற்றியாளர்களாக வலம் வரும் குறிக்கோளில், இருவரும் ஒரு மனதாக முடிவெடுத்து, தங்கள் காதலை, உறவை பிரேக் அப் செய்துவிட்டதாகவும் கூறப்பபடுகிறது. வாணிபோஜன், இப்போது செங்களம் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த சீரிஸில், நடிகர் கலையரசன் நடித்திருக்கிறார்.

இந்த வெப் சீரிஸ்க்கு பிறகு மற்றொரு வெப் சீரிஸில் நடிக்க, வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சீரிஸில், டூ பீஸ் உடையில், நீச்சல் உடையில், வாணிபோஜன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல், வாணிபோஜன் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், வாணிபோஜன் இதுவரை, ஓவராக கிளாமர் காட்சிகளில் நடிக்காதவர். குடும்ப குத்துவிளக்காக, சீரியலில், சினிமாவில் வலம் வருபவர். கிளாமராக நடிக்கச் சொன்னால், சில படங்களில் நடிக்க மறுத்தவர்.

அந்த படங்கள், பின்னர் பெரிய வெற்றிப்படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன என்பதையும் வாணிபோஜனே, சில நேர்காணலில் கூறியும் இருக்கிறார்.

ஆனாலும், நான் கிளாமராக நடிப்பதில் விருப்பமில்லாதவள் என்று கூறிவரும் வாணிபோஜன், தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மட்டும் அவ்வப்போது சற்று தூக்கலான தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு, ரசிகர்களி்ன் இரவு நேர தூக்கத்தை கெடுத்தவர்.

இந்நிலையில், புதிதாக நடிக்க உள்ள வெப் சீரிஸில், வாணிபோஜன் நீச்சல் உடையில், டூபீஸ் உடையில் நடிக்க ஒப்புக்கொண்டதாக வந்துள்ள தகவல் ஒரு தரப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தாலும், மற்ற ரசிகர்களுக்கு இப்போதே ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

சின்னத்திரை நயன்தாராவை சிக்குன்னு டூபீஸ் டிரஸ்சில பார்க்கறது எப்போது? என இப்போதே புலம்பத் துவங்கி விட்டனர். இதுவரை கிளாமருக்கு சிவப்பு கொடி காட்டிய வாணி, இப்போது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள, அடுத்தடுத்த வாய்ப்புகளைள பெற பச்சைக்கொடியை ஆட்டி விட்டாரோ? என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website