பிக்பாஸ் தமிழ் சீசன் 6ல் பங்கேற்கும் விஜய் டிவி பாடகி ராஜலக்ஷ்மி..

July 14, 2022 at 12:54 pm
pc

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் டிவி

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று வருகின்றனர்.

6வது சீசன்

கடந்த 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் 6 வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்க உள்ளார். வரும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகிறது.

பாடகி ராஜலக்ஷ்மி

இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல பாடகியான ராஜலக்ஷ்மி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா படத்தில்

பாடகியான ராஜலக்ஷ்மி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம்தான் பெரும் பிரபலமானார். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற சாமி பாடலை ராஜலக்ஷ்மி தான் பாடியிருந்தார். இந்தப் பாடல் பெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website