பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்-தேசிய முன்னேற்ற கழகம்!!பரபரப்பு!

October 31, 2022 at 7:19 pm
pc

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். போட்டியாளர் அசல் கோலார், இவர் குயின்சியின் கையை பிடித்துக்கொண்டு செய்த செயலால் வீடியோவில் சிக்கினார். மேலும், மைனா நந்தினி, ஜனனி ஆகியோரையும் அசல் எல்லை மீறித் தொட்ட வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்பி, அசலின் அத்துமீறால் தொடர்பாக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நிவா – அசல் ஆகியோரிடையே காதல் உருவாகி, அவர்கள் அத்துமீறி நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. 

தமிழக கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், சண்டை, சச்சரவு காட்சிகள் அதிக அளவில் நாளுக்கு நாள் பிக்பாஸ் சீசன் 6-ல் இடம் பெற்று வருகிறது. நிகழ்ச்சி என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் நினைத்து கொண்டு இருக்கிறது. சமுதாய சீர்திருத்தம் என்பது அனைவரும் பொறுப்பு உள்ளது. அந்த சமூக பொறுப்பை உணர்ந்து விஜய் தொலைக்காட்சி குழுமம் செயல்பட வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டு கொள்கிறேன். மேலும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website