பிக்பாஸ்-பணமூட்டையை தட்டித் தூக்கிய போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கொடுக்கப்பட்ட பணமூட்டை வாய்ப்பினை கதிரவன் தட்டித்தூக்கி வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் 100 நாட்களைக் கடந்து தற்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வந்தனர்.
ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் பல எதிர்பாராத திருப்பங்களும் நடந்தேறியது. கடந்த வாரம் ஏடிகே வெளியேறிய நிலையில், இன்று பிக்பாஸ் வழக்கம் போல் பணமூட்டையை இறக்கியுள்ளது.
கடந்த ஆண்டு பணப்பெட்டியை சரத்குமார் கொண்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பணமூட்டையாக தொங்க விடப்பட்டிருந்தது.
உள்ளே ஃபைனலிஸ்டாக இருந்த ஷிவின், அசீம், விக்ரமன், கதிரவன், மைனா, அமுதவானன் இவர்கள் 6 பேரில் இன்று கதிரவன் மூட்டையை எடுத்துவிட்டு வெளியேறியுள்ளார்.
கதிரிடம் சென்ற பணமூட்டை
இந்த சூழ்நிலையில் கார்டன் பகுதியில் தொங்கிய பண மூட்டையை கதிர் அறுக்க முயற்சிக்க, போட்டியாளர்கள் அனைவரும் வேண்டாம் என பதறியபடி அருகில் சென்றனர்.
ஆனாலும் கதிர் பண மூட்டையை கட் செய்யவே அனைவரும் இன்னும் காத்திருந்திருக்கலாம் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
கதிர் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என்று வீட்டில் உள்ளவர்களிடமிருந்து விடைபெற்றார். ஆனால் ஷிவினிடம் வந்து இறுதியாக கைகொடுத்த கதிரவனுக்கு ஷிவின் கை கொடுக்காமல், பதிலுக்கு கைகூப்பி கதிருக்கு ஷிவின் வணக்கம் சொல்ல, கதிர் புன்னகைத்தபடியே அங்கிருந்து சென்றுள்ளார்.