பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறக்கியுள்ள ரிஷி சுனக்!

October 24, 2022 at 7:25 am
pc

பிரித்தானிய பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் (Rishi Sunak) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரித்தானிய நாட்டின் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி – பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் (Liz Truss) கடந்த 20ம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன.

பிரதமர் பதவிக்கான போட்டியில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், (Boris Johnson) முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த பரபரபான சூழ்நிலையில் ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளனர்.

இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ளதாக ரிஷி சுனக் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிடுகிறார்.

பெரும்பாலான எம்.பி.க்களின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு உள்ளதால் அவர் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக அதிக வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறக்கியுள்ள ரிஷி சுனக் இந்திய வம்சாவளி எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website