பிரபல இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி.!

வித்தார்த் நடிப்பில் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் ரகுராம். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திரைப்படங்கள் தவிர சில ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார் ரகுராம்.
இளம் இசை அமைப்பாளரான ரகுராம் 8ம் வகுப்பு படிக்கும்போதே, மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்க்கு (Stephen Hawking ) பாதிப்பை ஏற்படுத்திய amyotrophic lateral sclerosis என்ற Geneti நோயால் இவரும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக அவர் பல ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்தார். குறிப்பாக அவர் ஒரு மாதம் உயிர் வாழ, மாதம் 10 லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருந்தது. இதற்கான செலவை அவரின் தாய் மாமன் கொடுத்து வந்தார். அதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி ரகுராம் உயிரிழந்துள்ளார். அவரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. 38 வயதான அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பலரும் ரகுராம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்