பிரபல தமிழ் திரைப்பட நடிகை காலமானார்!

January 27, 2023 at 11:45 am
pc

பிரபல மூத்த திரைப்பட நடிகை ஜமுனா தனது 86வது வயதில் காலமானார்.

தமிழ் திரையுலகில் ஜொலித்த ஜமுனா

தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஜமுனா. தூங்காதே தம்பி தூங்காதே, பொம்மை கல்யாணம், தெனாலி ராமன் உள்ளிட்ட 25க்கும் அதிகமான தமிழ் படங்களில் நடித்து ஜமுனா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 1936ஆம் ஆண்டு நிப்பானி ஸ்ரீனிவாச ராவ் – கவுசல்யா தம்பதிக்கு மகளாக ஜமுனா பிறந்தார்.

மறைவுக்கு இரங்கல்

தன்னுடைய 16வது வயதில் திரையுலகில் அறிமுகமாகி முனனணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜமுனா இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website