பிரபல தமிழ் நடிகரான அஜித் குமாரின் தந்தை மரணம்! ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் விடுத்த வேண்டுகோள்…

March 24, 2023 at 10:54 am
pc

பிரபல தமிழ் நடிகரான அஜித் குமாரின் தந்தை இன்று அதிகாலை காலமானார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சினிமா மட்டுமின்றி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட பல துறைகளிலும் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது தந்தை பி.சுப்ரமணியம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் காலமானார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அஜித்தின் தந்தை மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரின் இறுதிச்சடங்குகள் காலை 10 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அஜித், எங்கள் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம்.

எங்கள் இழப்பையும் புரிந்து கொண்டு இறுதிச்சடங்கை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்க வேண்டிக்கொள்கிறோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website