பிரபல தயாரிப்பாளரின் மகள் மரணம்!!20 வயதில் கேன்சரால் பாதிக்கப்பட்டு மரணம்..

July 20, 2024 at 11:54 am
pc

பிரபல தயாரிப்பாளரின் மகள் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார். 

T-Series

பிரபல தயாரிப்பாளர் பாலிவுட் படங்களில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் தயாரிப்பு நிறுவனம் T-series. இந்தி மொழி படங்களை தாண்டி இந்தியாவின் பட தயாரிக்கும் அநேக மொழிகளிலும் T-series தனது காலை பாதித்துள்ளது.

Music company’ஆக பயணித்து வரும் T-series, படங்களை co-produce செய்தும் வருகிறார்கள். இந்த நிறுவனத்தை தற்போது நடத்தி வருபவர் பூஷன் குமார். இவரின் cousin நடிகர் – தயாரிப்பாளர் கிருஷ்ணா குமார். 

மரணம் 

இவரது 20 வயது மகள் திஷா குமார்,நீண்ட காலமாக கேன்சர் பாதிப்பால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஜெர்மனி நாட்டில் சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், நேற்று மரணமடைந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பையும் T-series நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரிதாக வெளிப்புற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாதவராகவே இருந்த திஷா குமார், தனது 20 வயதில் மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பாலிவுட் வட்டாரங்களில் வருத்தத்தை உண்டாகியுள்ளது.

திஷா குமாரின் அப்பா கிருஷ்ணா குமார், சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர்களின் தயாரிப்பில் அண்மையில் வெளியாகி இருந்த அனிமல் படம் பெரும் வெற்றியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website