பிரபல திரைப்பட நடிகர் சரத்பாபு காலமானார்!

May 23, 2023 at 7:00 am
pc

பிரபல தென்னிந்திய நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு(71) இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றின் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால் நடிகர் சரத்பாபு இன்று உயிரிழந்துள்ளார். நடிகர் சரத்பாபு-வின் இழப்பிற்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சரத்பாபு இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வேகமாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து இருந்ததுடன், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1977ம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகர் சரத்பாபு அறிமுகமானார்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வலம் வந்த நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த அண்ணாமலை மற்றும் முத்து ஆகிய திரைப்படங்கள் இவருக்கு புகழை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website