பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை பிரியங்கா மோகன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகின்றார். ஆம் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்துவிட்டார்.
ஆனால் ஆர்த்தி ஜெயம் ரவியை விவாகரத்து செய்யவில்லை… அதில் விருப்பமும் இல்லை என்று தெரிவித்து வருகின்றார்.
இந்த தம்பதிகளின் பிரிவிற்கு ஜெயம் ரவியின் மாமியார் அதாவது ஆர்த்தியின் தாய் தான் காரணம் என்ற உண்மை வெளியாகியது.
ஆர்த்தி தனக்கு இரண்டு, மூன்று வங்கிக்கணக்குகள் வைத்து செலவு செய்து வந்த நிலையில், ஜெயம் ரவியின் வங்கிக்கணக்கில் பணம் எடுத்தால் அது ஆர்த்திக்கு தான் மெசேஜ் செல்லுமாம்.
இதற்கான காரணத்தை நேரடியாக ரவியிடம் கேட்காமல் அவரது உதவியாளரிடம் கேட்டு அவ்வப்போது அவமானப்படுத்தவும் செய்துள்ளதாக ஜெயம் ரவி உண்மையை உடைத்தார்.
இந்நிலையில் ஜெயம் ரவி பிரியங்கா மோனும் திடீரென மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? என்று கேள்வி எழுப்பிதுடன், இவர்களுக்கு சிலர் வாழ்த்தும் தெரிவித்து வந்தனர்.
ஆனால் பின்னர் தான், அவர்கள் நடித்து இருக்கும் பிரதர் படத்தின் புகைப்படம் என்பது தெரியவந்தது. நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், ராவ் ரமேஷ் ஆகிய திரை நட்சத்திரங்கள் நடித்து, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து, இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கிய படம், பிரதர். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.