பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த்: சொன்ன ஒரே காரணம்!

நடிகர் விஜயகாந்த் 80கள் தொடங்கி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர். அவர் அரசியலில் குதித்தபிறகு படங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தினார். அதன் பின் சில வருடங்களில் அவர் உடல் நிலையம் மோசமானதால் சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த வருடம் 2021 டிசம்பர் 28ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா துறை நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜயகாந்த் பற்றிய நினைவுகளையும் பல்வேறு பிரபலங்கள் தற்போது பேட்டிகளில் பகிர்ந்து வருகின்றனர்.
விஜயகாந்த் நடிகை ஊர்வசியை தங்கச்சி என்று தான் எப்போதும் அழைப்பாராம். அதனால் அவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். அவர்கள் சில படங்களில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் எவ்வளவு வெள்ளையாக இருக்கிறார், நான் எப்படி இருக்கிறேன் என அடிக்கடி ஷூட்டிங்கில் சொல்வாராம். இந்த விஷயத்தை சமீபத்திய பேட்டியில் ஊர்வசி கூறி இருக்கிறார்.