பிரபல நடிகை அனுஷ்காவின் சகோதரரை கொல்ல சதி?

June 13, 2022 at 11:19 am
pc

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. இவரது சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி. இவர், கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ஆவார். 

ஜெய கா்நாடக அமைப்பின் தலைவராக இருந்து மரணம் அடைந்துள்ள முத்தப்பா ராயின் நெருங்கிய ஆதரவாளராக குணரஞ்சன் ஷெட்டி இருந்து வருகிறார். இந்த நிலையில், குணரஞ்சன் ஷெட்டியை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாக கூறி, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு, ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

அதே நேரத்தில் குணரஞ்சன் ஷெட்டியும் தன்னை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும், கவனமுடன் இருக்கும்படியும் ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாகவும் தெரிவித்துள்ளார். முத்தப்பா ராயின் மற்றொரு நெருங்கிய ஆதரவாளரான மன்னுத் ராய்க்கும், குணரஞ்சன் ஷெட்டிக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

இதன்காரணமாக மன்னுத் ராய், குணரஞ்சன் ஷெட்டியை கொலை செய்ய திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை மன்னுத் ராய் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. போலீஸ் விசாரணை நடத்தினால் உண்மை வெளியே வரும் என்று மன்னுத் ராய் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website