பிரமாண்டமான நடிகர் தனுஷின் புது வீடு…ரசிகர்களுக்கு விருந்து..வைரல் புகைப்படங்கள்..!

February 20, 2023 at 9:47 pm
pc

சென்னையின் முக்கிய பகுதியான போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் புது வீடு கட்டி வந்தார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் சமீபத்தில் இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

பிரம்மாண்டமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த வீட்டில் பிரமாண்டமான நீச்சல் குளம், ஆடம்பர உள் விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும் சர்வதேச தரத்தில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாகவும் இன்டீரியர் வேலைக்களுக்காகவே பல லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் புது வீட்டில் தனது பெற்றோர்களை அழைத்து வந்து கௌரவப்படுத்திய தனுஷ், ரசிகர்களையும் அழைத்து வந்து விருந்து வைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை குடும்பத்துடன் அழைத்த தனுஷ் தனது புது வீட்டை அவர்களுக்கு சுற்றி காண்பித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website