பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்த உலக நாயகன்!!தேசிய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேகுகள்….

August 17, 2022 at 12:44 pm
pc

1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஷங்கர். அன்றில் இருந்து இன்றுவரை தொடர்ந்து கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குநராக இருந்து வருகிறார்.

ஒவ்வொரு படத்திலும் வெற்றி காணும் ஷங்கர் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் #HBDShankar #happybirthdayshankar #Indian2 ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இந்தியன் 2 பட வேலை பாதியில் நிறுத்தப்பட்டது அனைவருக்கும் தெரியும். அந்த பட வேலையை மீண்டும் அதுவும் விரைவில் துவங்கவிருக்கிறார் ஷங்கர்.

இந்நிலையில் ஷங்கரை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார் கமல் ஹாசன். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் 
@shankarshanmugh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website