பிளிப்கார்ட்டில் ரூ.79,064 விலையுள்ள ட்ரோன் கேமிராவை ஆர்டர் செய்த நபருக்கு வந்த பொம்மை கார்…அதிர்ச்சி

September 26, 2022 at 7:25 pm
pc

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் (35). ஏ.சி. மெக்கானிக்கான இவர் தனது நண்பர் சுரேஷிற்காக பிளிப்கார்ட்டில் ரூ.79,064 விலையுள்ள ட்ரோன் கேமிராவை ஆர்டர் செய்துள்ளார். அதோடு கிரெடிட் கார்ட் மூலம் செப்20ஆம் தேதி முழு பணத்தையும் செலுத்தியுள்ளார். அதன்பின் இன்று பார்சல் வந்துள்ளது. அப்போது அந்த பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மொ கார் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website