‘பீஸ்ட்’ பட நடிகருக்கு 2ஆம் திருமணம்.

January 3, 2024 at 6:57 pm
pc

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ’பீஸ்ட்’ திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். பிரபல மலையாள நடிகரான இவர் தமிழில் ’பீஸ்ட்’ படம் மூலம் அறிமுகமானார் என்பதும் அதன் பின்னர் சமீபத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் ஷைன் டாம் சாக்கோ நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தபீதா மேத்யூஸ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த தம்பதிக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் 40 வயதாகும் ஷைன் டாம் சாக்கோ தனுஜா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்தது. நிச்சயதார்த்த புகைப்படங்களை ஷைன் டாம் சாக்கோ தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website