புரத சத்தின் நன்மைகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரியுமா ..?

March 6, 2023 at 7:07 am
pc

நமது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கிய தேவையாக அமைவது புரதசத்து ஆகும். இப்பொழுது பபுரதசத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகளை பற்றி தெளிவாக காண்போம் உறவுகளே.

1.உடல் அமைப்பு

உங்களின் உடல் அமைப்பினை கொடுப்பது சதை மற்றும் எலும்புகள் ஆகும். அந்த சதை மற்றும் எலும்புகளின் வடிவத்திற்கு புரதம் மிக மிக அவசியம். உங்கள் சதை மற்றும் எலும்புகள் எல்லாமுமே புரதத்தால் ஆனவை. எனவே தசைகளின் வலிமைக்கு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து வாருங்கள் நண்பர்களே.

2. முடியின் ஆரோக்கியம்

நமது முடி புரதத்தால் ஆனது. நமது முடி கெராட்டீன் என்னும் புரதத்தால் ஆனது. உங்கள் உணவில் தேவையான அளவு புரதம் கிடைக்காவிட்டால் உங்களுக்கு முடி உதிர்வு, குறைவான முடி வளர்ச்சி போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும். எனவே தினமும் புரதம் நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.

3. உங்களின் உடல் செல்களை புதுப்பிக்க உதவும்

உங்களின் உடலின் உறுப்பு புதுப்பிக்கவும் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் புரதசத்து மிக மிக அவசியம். உங்களின் உடலில் புரதசத்து குறையும் போது உங்களின் செல்கள் புதுப்பிப்பது குறையும்.

4. உடலின் வளர்ச்சிக்கு உதவும்

உங்களின் உடல் வளர்ச்சிக்கு முக்கிய தேவையாக அமைவது புரத உணவு. வளரும் இளம்பருவத்தினர்க்கு புரத சத்தானது அதிக அளவில் தேவைப்படுகின்றது. அவர்கள் குறைவாக புரதம் எடுத்துக்கொண்டால் அவர்களின் வளர்ச்சியானது பாதிக்கப்படும்.

5. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலம்

உங்கள் உடலில் புரதச்சத்து குறைந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே உங்களின் நோய்  எதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்த புரத சத்து நிறைந்த உணவுகளை உண்டு வாருங்கள் நண்பர்களே.

6. மூட்டுக்களின் ஆரோக்கியம்

உங்களின் மூட்டுக்கள் ஏராளமான தசைகள் மற்றும் ஜவ்வுப்பகுதி நிறைந்த ஒன்று. ஆரோக்கியமான மூட்டுகளுக்கு புரதச்சத்து மிக மிக அவசியம். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு தினமும் தேவையான அளவு புரதசத்தினை கொடுத்து வரவும் நண்பர்களே.

புரதம் நிறைந்த உணவுகள்

1. சைவ உணவுகள்

பருப்பு வகைகள், பாதாம்,வேர்க்கடலை, பிஸ்தா, முந்திரி, பால், கொண்டைக்கடலை, சோயா வகைகள், கோதுமை, ராகி, போன்றவற்றில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது.

2. அசைவ உணவுகள்

அசைவ உணவுகளில் முட்டை, இறைச்சி, மீன், நண்டு போன்றவற்றில் அதிக அளவில் புரதம் நிறைந்துள்ளது.

எவ்வளவு புரதம் தேவை ?

ஒவ்வொரு ஆரோக்கியமான மனிதனுக்கும் சராசரி ஓவ்வொரு கிலோகிராம் எடைக்கும் ஒரு கிராம் புரதம் தேவைப்படும். உதாரணமாக 70 கிலோ எடை உள்ள ஒரு மனிதனுக்கு தினமும் 70 கிராம் புரதம் தேவைப்படும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website