புரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி.. ஜோடியாகும் நித்யா மேனன்.. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி ஒரு திரைப்படத்தில் புரோட்டா மாஸ்டராக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக தேசிய விருது வாங்கிய நித்யா மேனன் இணைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி – நித்யா மேனன் ஜோடி ஏற்கனவே மலையாள படம் ஒன்றில் இணைந்து நடித்திருந்தாலும் தமிழில் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கும் இந்த புதிய படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் சில தினங்கள் புரோட்டா மாஸ்டர் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாகவும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.