புற்றுநோயை விரட்டும் கறிவேப்பிலை!

December 31, 2022 at 8:26 am
pc

பொதுவாக கறிவேப்பிலை அனைத்து இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடியது. உணவின் மனத்தை அதிகரிக்கவும், சுவையை கூட்டுவதற்கும் தினமும் சமையலுக்கு அதிகளவு பயன்படுத்துகிறோம்.

கறிவேப்பிலை நன்மைகள்

அதில் விட்டமின் A, B, C, கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளது. 

குறிப்பாக தினமும் இதை பச்சையாக சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்வதற்கும், கூந்தல் நன்கு வளர்ச்சி அடைவதற்கும் பயன்படுகிறது. 

இது அவ்வளவு மருத்தவ குணங்களை கொண்டது. கறிவேப்பிலை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து கொண்டால் இன்னும் பல மடங்கு நன்மையை பெறலாம். 

எப்படி எடுத்து கொள்ளலாம்?

* கறிவேப்பிலைப் பொடியை தினமும் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் தலைமுடி கொட்டுவதைத்த தடுக்கலாம்.

* கரிசாலை, நெல்லி, கீழாநெல்லி, அலரி இவற்றுடன் சமபங்கு கறிவேப்பிலைச் சாறு சேர்த்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம். 

* கறிவேப்பிலையில் பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளதால் பார்வைத்திறனை மேம்பட வைக்கும். 

* துவையலாக , பொடியாக , குழம்பாக உணவில் சேர்த்த வந்தால் சாதாரண செல்கள் புற்றுநோயாக மாறவதை தடுக்கலாம். 

* சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது கல்உப்பு , சீரகம், சுக்கு ஆகியவற்றை சமஅளவில் சேர்த்து சுடுசோற்றில் கலந்து சாப்பிட வைத்தால் பசியின்மை நீங்கும். 

* அஜீரணம், பசியின்மை, பேதி ஆகியவை தான் குடல் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறி. இதனை போக்க கறிவேப்பிலையைச் சாப்பிடால் நல்ல பலன் கிடைக்கும். 

* சுண்டல் வற்றல், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சமபங்கு எடுத்து , பொடி செய்ய வேண்டும். இந்தப்பொடியை கால் டிஸ்பூன் எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் கழிச்சல் நோய் படிப்படியாக கட்டுக்குள் வரும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website