பெண்களுக்கு மாதவிடாய் தள்ளி போவதற்கான காரணங்களை பற்றி தெரியுமா …?

November 10, 2022 at 7:14 am
pc

பெண்களுக்கு மாதவிடாய் தள்ளி போவதற்கு என்ன காரணம் என்பதை பாக்கலாம். ஏனென்றால் மாதவிடாய் தள்ளிப்போகும் சூழல் நம் அனைவருக்கும் ஏற்படுகிறது. ஒருவருக்கு இருக்கும் மாதவிடாய் பிரச்சனை மற்றொருவருக்கு இருப்பதில்லை. ஒருவருக்கு ஒரு சில காரணங்களால் மாதவிடாய் தள்ளிப் போகும் ஆனால் மற்றவர்களுக்கு அது வேற ஒரு காரணங்களால் தள்ளிப்போய் இருக்கலாம்.

நமக்கு மாதவிடாய் பிரச்சனை உள்ளது அதில் இருந்து நாம் வெளிவர வேண்டும் என்று நினைத்தால், நமக்கு ஏன் மாதவிடாய் சரியாக வரவில்லை என்று நாம் நன்கு புரிந்து வைக்க வேண்டும். முறையான தேதியில் மாதவிடாய் வர வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு நம் வாழ்க்கை முறையை சிறிது மாற்றி அமைக்க வேண்டும், அப்போதுதான் மாதவிடாய் சரியான தேதிற்க்கு வரும்

நீங்கள் திருமணம் ஆணவர்களாக இருந்தால் பிரக்னன்சி டெஸ்ட் மூலம் தெரிந்து கொள்ளலாம், அதன்பின் மருத்துவரை அணுகலாம். ஆனால் இந்த மருத்துவம் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதவிடாய்க் கோளாறு தீர நிரந்தர வழிகாட்டு.

அவர்களுக்கு முக்கியமாக மாதவிடாய் வருவதற்கு உடலில் ஹார்மோன்கள் சம அளவில் இருப்பது மிகவும் அவசியம். அதனால் ப்ரோலாக்டின் ( Prolactine) மற்றும் ஈஸ்ட்ரோஜன் (estrogen) இவை இரண்டு மட்டும் தான் பெண்களுக்கு முக்கியமான ஃபேமிலியர் ஹார்மோன்ஸ்.

இவை இரண்டும் சரியாக சுரக்கவில்லை என்றால் நமக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படும்.

அதனால் முடிந்த அளவு அதை வீட்டிலிருந்தே சரி செய்ய பார்க்கவும். எடுத்தவுடனே மருத்துவர்களை நாடி செல்லக்கூடாது. நமக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்று தெரிந்து கொண்டு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். ஏனென்றால் இது ஒரு நோயோ அல்லது குறைபாடோ கிடையாது, இது இயற்கையாக நடக்கக் கூடியதுதான்.

மாத்திரை மூலம் சரி செய்வதை இனி வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே சரி செய்து கொள்ளுங்கள். இதற்குத் தேவையானவை முருங்கைக்கீரை, கருஞ்சீரகம், மஞ்சள் தூள், கருப்பு எள் இவைகள்தான். இதனை இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை எடுத்து, அத்துடன் அரை தேக்கரண்டி கருப்பு எள், கால் தேக்கரண்டி கருஞ்சீரகம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை இரு வேளையும் குடித்து வாருங்கள்.

இதை தினமும் சாப்பிட்டு வந்தால் தாமதித்த மாதவிடாய் முறை படும். மேலும் ரத்த உற்பத்தி உண்டாகி மாதவிடாய் கோளாறுகள் அனைத்தும் முறையாகத் தீரும். இதை வீட்டில் செய்து பாருங்கள் உங்கள் மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website