பெண்களே… வலியே இல்லாம இனி உடலில் இருக்கும் முடியை நிரந்தரமாக நீக்க சூப்பரான டிப்ஸ் ….!!

June 12, 2022 at 8:14 am
pc

ஒவ்வொரு பெண்ணும் மென்மையான, மிருதுவான மற்றும் முடி இல்லாத சருமத்தை கொண்டிருக்க வேண்டும் என்று தான் கனவு காண்கிறார்கள். இது கிட்டத்தட்ட எல்லா கலாச்சாரங்களிலும் அழகுக்கான உன்னதமான வரையறை. எல்லோரும் உடல் முடியுடன் தான் பிறக்கிறார்கள். சில ஹார்மோன் மாற்றங்களால் உடல் முடி உதிரலாம். ஆனால், பல பெண்களுக்கு அவ்வாறு நடப்பதில்லை. எனவே, அவர்களுக்கு சில மாற்று வழிமுறைகள் தேவை.

நமது தமிழர் பாரம்பரியத்தில் அக்கால பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். அதனால் தான் அக்கால பெண்மணிகள் உடலில் முடியின்றி பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் இருந்தார்கள். ஆனால், இக்கால பெண்களோ அதை விரும்புவது கிடையாது. அதற்கு பதிலாக பல வலிமிகுந்த வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். உடல் மெழுகு தான் இருப்பதிலேயே வலி மிகுந்த முடி அகற்றும் முறையாகும்.

பல முடி அகற்றும் கிரீம்கள் தோலை கருமையாக்குவதோடு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. பின்ன என்ன தான் செய்வது என்று குழப்பமா? கவலையை விடுங்க. வலியில்லா முடி அகற்றும் முறை வந்தாச்சு. அது தான் நாம் தினமும் உபயோகிக்கும் சோப். என்னாது சோப்பா? சோப்பு உடல் முடியை அகற்றுமா? ஆம், ஆனால் நாம் தினமும் பயன்படுத்தும் சோப் கிடையாது. இதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன. இது சருமத்தை மென்மையாகவும், கலராகவும் மாற்றுகிறது. இப்போது, முடி அகற்றும் சோப்புகள் எது என்பதை பார்க்கலாம்.

சிறந்த முடி அகற்றும் சோப்புகள்:

பல பெண்களின் சிறந்த விருப்பமாக முடி அகற்றும் சோப்புகள் தான் முதலில் இருக்கின்றன. ஏனெனில் அவை வாக்சிங், ரேஸர்கள் மற்றும் கிரீம்கள் காரணமாக ஏற்படும் பக்க விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. சுத்தமான மற்றும் மென்மையான சருமத்திற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த முடி அகற்றும் சோப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1.ஏபி சேவோன் ஹேர் ரிமோவல் சோப் :

பொன்பனின் இந்த பியூட்டி பார், ஒளிரும், முடி இல்லாத மற்றும் ஈரப்பதமான சருமத்தை விரும்பும் பெண்களுக்கு வலியற்ற முடி அகற்றும் விருப்பமாகும். இது கைகள், கால்கள், அக்குள் மற்றும் V கோடு ஆகியவற்றில் பயன்படுத்த ஏற்றது.

எப்படி உபயோகிப்பது:

  • உடலில் போட்டு 5 நிமிடங்கள் நுரைக்க வைக்க வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும்.
  • பட்டுப்போன்ற மென்மையான கூந்தல் இல்லாத சருமம் உங்களுக்கு கிடைக்கும்.
  • எபி சவோன் சோப்பை (மாதுளை தோல்கள், அக்வா மற்றும் இன்னும் சில) தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்கள் சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை வழங்குகின்றன.
2.கிளாசிக் வேலே ஹேர் ரிமோவல் சோப்:

இது விலை கம்மி நல்லா இருக்காது என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இது தான் பெண்களுக்கு சரியான சோப். இது சருமத்தை ஈரப்பதமாக்குதல் மற்றும் டோனிங் செய்யும் இயற்கைப் பொருட்களின் நன்மையால் நிரம்பியுள்ளது. அதன் தனித்துவமான ஃபார்முலா நுரை மற்றும் கடினமான கால் முடிக்கு ஆழமான கண்டிஷனிங் வழங்குகிறது. இதை பயன்படுத்திய பிறகு கால்களுக்கு பளபளப்பையும், ஃவேர்னஸையும் தருகிறது.

எப்படி உபயோகிப்பது:

  • காலில் போட்டு நுரை வருமாறு தேய்த்து 3 முதல் 5 நிமிடங்கள் வரை வைக்கவும்.
  • பின்னர் தண்ணீரை கொண்டு கழுவவும்.
  • அதன் செயல்திறன் உங்கள் முடியின் கடினத்தன்மையை பொறுத்தது.
  • மிகவும் கடினமான முடி இருந்தால், முடி இல்லாத கால்களை பெற சிறிது நேரம் எடுக்கும்.
3.க்கிம் பெர்மனட் ஹேர் ரிமோவல் சோப் :

பர்மனட் முடி நீக்கத்திற்கு இந்த சோப்பு சரியான தேர்வு. கடல் உப்பு மற்றும் பிரத்தியேக ஃபார்முலேஷன் ஹேர் கொண்ட இந்த கேரட் எண்ணெய் கலந்த முடி அகற்றும் சோப்பு, 2 வாரங்கள் வரை உங்கள் சருமத்தை மென்மையாகவும், பட்டுப் போலவும் வைத்திருக்கும்.

எப்படி உபயோகிப்பது:

  • முடி இருக்கும் இடத்தில் தேய்த்து, நுரை வருமாறு தேய்த்து 4 முதல் 5 நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.
  • பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
4.கோகோனுட் மில்க் சோப் பை கிங்போ:

இந்த அற்புதமான முடி அகற்றும் சோப்பில் பால் மற்றும் கிரீம் நிறைந்துள்ளது. இது பெரும்பாலும் கால்கள், கைகள் மற்றும் அக்குள்களில் இருந்து முடிகளை ஆழமாக நீக்குகிறது. இது நிறையை நுரையை உற்பத்தி செய்கிறது மற்றும் சருமத்திற்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. இந்த சீன பியூட்டி பார் 5 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது.

எப்படி உபயோகிப்பது:

  • 2 நிமிடங்கள் முடி இருக்கும் இடத்தில் போட்டு தேய்த்து, அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
  • வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து, துணியால் துடைக்கவும்.
  • முகம் மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website